Tuesday, July 17, 2012

கண்களை மூடினேன் ......
தூங்கவே .......
வரவில்லை .....
தெரிந்தது தொலைவில் உந்தன் திருமுகமே .......!
திறந்து பார்க்க துடித்தது கண்கள் ....
உன் முகம் மறைந்து விடுமோ என்று
                                       ஊமையாய் இருந்தது விழிகள் ....!
இரண்டு ஆள் உயரமுள்ள .....ஈரமில்லா மரம் ....
இருப்பவர்கள் தேகம் தேயாமலிருக்க ......
வலிநெடுகும் இதமாய் அதன் இலைகள் .....
அதிலும் அழுத்தமாய் உன் பாத சுவடுகள் ......!
                                                 பார்த்த படியே முன்னேறினேன் ..!!!
மஞ்சள் பூக்களும் பச்சை இலைக்கும் இடையில் ......
வெள்ளை மேஜையில் மெய்மறந்து ......
உன் முகத்தை முட்டியில் சாய்தபடி....
அது சரியாமலிருக்க இருக்கி பிடித்தபடி
                                       உன் இரு கைகள் ...அடக்கமாய் உட்கார்து இருந்தாய் ........
உன் பார்வை என் முகத்தில் வெளிச்சமாய் .....
கலைந்தது கனவு ....
திறந்தது கண்கள் ....
வெளிச்சம் சூரியனிலிருந்து அல்ல ...என் செல் போனிலிருந்து
உன் "காலை வணக்கம் "
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ....
                                           கோவபடாமல் கேள் ...
"கனவுக்கு காரணம் நி
கனவில் வருபவள் நி
கனவை கலைத்தவலும் நீ தான்... நீயே தான் ".....  

நடுத்தர வர்கம்.....
சுருக்கமாக சொன்னால் -அறைகுறை "வாழ்கை"
விரிவாக சொன்னால் -சமுதாயத்தை பார்த்து பார்த்து ...
                                            பயந்து ஓடும் "வர்கம்"...
படிகட்டின் நடுவில் ...
ஓர் படி இறங்கினால்...
 முதலையின் வாய்....
முயற்சித்து தான் மூச்சு விட முடியும் ... மீள முடியாது  வறுமை-"வலிக்கும் "    

ஓர் படி மேலே ...
வெறி பிடித்த குரங்கு ....
கையில் துப்பாக்கியோடு -அதும்
உன்னை குறிவைத்து .....
குண்டு பாயும் என்று தெரியும் ...நேரம் தெரியம் வரை  "நடிக்க" வேண்டும்