Friday, September 4, 2015

மலரும் பூ

 

மலரும் பூ
இதழ்களாய் உதிர்த்து - மீண்டும்    மலரும்  நம்பிக்கை இல்லா விடினும்,
உதிரும் உண்மையை உணர்ந்து,
வாடாது- இதழ் பிரித்து -(நீ) சிரிக்கும்  இந்த  நொடி ..
இந்த ரோஜாவை  -
என் பிரியத்தோடு  என்ன ?
உன் முகத்தோடும் ஒப்பனை சரிதானே..?

ஆசையை  உவமையில்  சொல்லும்  ஓர் கற்பனை...

இனிய  நொடியும்-
இந்த நொடி மட்டும்.
இந்த ஒவ்வொரு நொடி மட்டும்!!

Arjunan.I

Friday, August 14, 2015

"சுதந்திர தின நாள் வாழ்த்து"

"சுதந்திர தின நாள் வாழ்த்து"

வெற்றிகரமாக 69வது முறையாக பிறந்த விடுதலைக்கு - சுதந்திர தின நாள் வாழ்த்து.
எழுபதை நெருங்கும் மகிழ்ச்சி - இருப்பினும்
அடி மடியில் கை வைக்கும் சில வியாதிகள்.
அவ்வப்போது எச்சரிக்கும் இயற்கை சீற்றம்.

வீட்டுக்கும் நாட்டுக்கும் பேதமில்லை
நாம் குழந்தையாய் பிறந்து - பின் வளர்ந்து,
குறை சொல்லி பழகிவிட்டோம்.

கோடி கணக்கில் நாம் - சொத்து - நாட்டுக்கு,
மகனாய் தந்தைக்கு ஆற்றுவோம் கடமையை - நாட்டுக்கே.

நாம் மனிதனாய்- மனிதனை தேடி பிடித்து நேசம் செய்வோம்,
தேவைக்கு உதவி கொண்டிருப்போம்.

தமிழன் இலங்கையை யென்ன..?
இந்தியா உலகை யென்ன ..?

இழந்ததை பெருமையோடு அறுவடை செய்வோம். நாம் கண்ட தோல்வியை நம்பிக்கையால் வெற்றி கொள்வோம் .

கண்ட கனவை நிறைவேற்றுவோம்.

Arjunan.I

Monday, August 3, 2015

"காலம் பதில் சொல்லும்"

"காலம் பதில் சொல்லும்"

காலமே பதில் சொல்லட்டும் - அதற்கும் முன்
என்னை கேட்டு போகட்டும்.

நான் வாங்கிய வரம் தோல்வியாக இருக்கலாம்,
நான் பிழைப்பது வாழ்வுக்காக இருக்கலாம்,
இருப்பினும் - நான் பிறந்தது வெற்றிக்கு.

இப்படிக்கு,
நம்பிக்கை

Arjunan.I

Monday, July 20, 2015

"உனக்காக"

மடியில் கணம் இருக்கும் போது தான்,
வழியில் பயம் தெரியும்.
புயல் அடித்து ஓயிந்த பின்னே,
அமைதி பிறக்கும்.
கோவத்தோடு எழுதுகுறேன் - காதல் உமக்கு
புரியும் நம்பிக்கையில்,

அரசியல் கட்சிக்கு ஆபத்து - தொகுதி பங்கீடு.
ஆசை காதலுக்கு ஆபத்து - தகுதி வெளியீடு.

உமக்கு என்னும் விகுதி சொல்லி உன்னை தராசில் நிறுத்தி பார்த்தேன்,
என் பக்கமே சாய்ந்தாய் - மகிழ்ச்சி.
இப்பையும் முள் குத்தும் காயத்தை மறைத்தே வைக்க,
மணம் சொல்கிறது உனக்காக.

Arjunan.I

Wednesday, July 15, 2015

வெற்றிக்கு வேஷம் போடனும்.
வேஷம் போட விலை கொடுக்கனும்.
ஆனால்,
வெற்றி விற்பனைக்கு  இல்லையாம்  !!!

Arjunan.I

Monday, July 6, 2015

இப்படிக்கு - உச்சரிப்பு .

முதலில் பாறைகளில் செதுக்கினோம்,
செப்பு தகடுகளில் பொறித்து வைத்தோம்,
காகித வடிவம் கொடுத்து எழுதினோம்,
இப்பயோ வலை தளம் பதிவு,
நாளையோ வெறும் ஒலி சித்திரமே ...?

"இதுக்கு இப்ப என்ன குறைச்சல் ..?"

"குறைச்சல் என்ன ? தொலைத்தே விட்டாலும் தேடவா போகுரீர் ...?
என்னை மீட்கவா வருவீர் ..?"

இப்படிக்கு - உச்சரிப்பு .

Arjunan.I

Friday, August 15, 2014

"தோல்வி நாட்கள் ""தோல்வி நாட்கள் "

அத்தியாயம் 11

"தோல்வி வலிமையை தந்தது
வெற்றி வலியை தானே தந்தது "
இதுவரை...
 
வேலன் மரணம்

இனி

தனிமையில் கருப்பன் .


அப்பா அழுகைக்குள் ஒழிந்து கொண்டிருந்த வார்த்தைகள்

"உன் அத்தை மகன் வேலன் ....
உன் அத்தை மகன் வேலன்  கார் விபத்தில் செத்துட்டான்.

அரசனுக்கு ஒரே அக்கையின் மகன்
கருப்பனுக்கு உறவில் போலி இல்லையென்று புரிய வைத்த ஒரே பந்தம்.
வேலன் - பிணமாய்.

சுற்றி சொந்தங்கள்.
அருகில் மனைவி
மேலே குழந்தை - இருந்தமையால் உன் உதடு விரிந்து முகம் மலர்ந்ததோ ? இதயம் மட்டும் துடிகலையேடா ?
குழந்தைக்காக எழுந்து வந்துவிட மாட்டிங்களா?
முகம் தெரியாத குரல்கள்.
கருப்பனுக்கு கண்ணீர் மட்டுமே பேசியது.
"சுய தொழில் சொல்லி கொடுத்து திக்கு திசை காமிச்சு கொடுத்தவன் நீ"
சுழல்ல சிக்கி, நடுவுல நிக்கிறேன் - துடுப்பா தோள் கொடுத்து தூக்கிடுவன்னு நம்பி வந்தேன். என்னை அவசரமுன்னு என்னை தூக்கவச்ச ?
சுடுகாட்டு வழியில்
பஞ்சுல சுத்தியவனை
பாடையோடு தோளில் வைத்து தூக்கி போகும் வழியில் வேலனை கேள்வி கேட்டுக் கொண்டே நடந்தான்.

சடங்குகள் முடிந்தது.
எளவு வீடு - இருள் வீசிற்று. "சோலி பார்க்கணும்னு" சொல்லிக்காமல் விடை பெற்றான்.

வானுக்கு நட்சத்திரம்
வாழ்வுக்கு நம்பிக்கை
கருப்பனுக்கு வாய்க்கபெற்ற நம்பிக்கை நட்சத்திரம் - வேலனை வானுக்கே தாரை வார்த்து விட்டு,
உறைந்த கண்ணீர் சுமையோடு விற்பனையை தொடங்கினான்.

தோல்வியை கடந்த இழப்பு.
வலியை கடந்த வேதனையை கொடுத்தது.
பகட்டையும் பதட்டத்தையும் பிளந்து பக்குவம் வந்தது கருப்பனுக்கு.

"மாற்றம் ஒன்றே மாறாதது "
பழமொழி கூட காலப் போக்கில் வார்த்தை வடிவம் மாறும்.
பாவம் கருப்பன் வாழ்கை மாறவில்லை.

கைக்குள் அடங்கும் சம்பளம்
கடித்து விடாத கடன் வட்டி
விற்பனையாளன் வேலை
ஆதரவு தரும் அம்மா
தட்டிக்கொடுக்கும் தந்தை,
அனைத்துமாய் நட்பு
     கருப்பன் வாழ்கை மாறுவதே இல்லை.

பட்டம் பெற்றான்
முதலீடு கிடைத்தது
மென்பொருள் விற்பனை சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றான்.
வேலை கிடைக்காதோர் செய்யும் விற்பனையாளன் வேலையை
வரமாக மாற்றினான்
விரும்பியவர்கள் பயிற்சி பெற கூடம் அமைத்தான்.
வெற்றிகள் வந்தன - ஆனால் கருப்பனுகோ
அவன் தேடிய தோல்வியின் காரணங்களுக்கு விடையாகவே கிடைத்தன.

என் வியர்வையின் வலிக்கு நீ விடையாய் வந்திருந்தால் வெற்றியே உன்னை வணங்கிருப்பேன். என் வேதனையையும் இழப்பையும் விலையாய் பெற்று தானே வந்தாய். விலகிப் போ..... கருப்பன் மாறவேயில்லை
 ***************************************நிறைவுற்றது***************************
Arjunan.I