Friday, August 15, 2014

"தோல்வி நாட்கள் "



"தோல்வி நாட்கள் "

அத்தியாயம் 11

"தோல்வி வலிமையை தந்தது
வெற்றி வலியை தானே தந்தது "
இதுவரை...
 
வேலன் மரணம்

இனி

தனிமையில் கருப்பன் .


அப்பா அழுகைக்குள் ஒழிந்து கொண்டிருந்த வார்த்தைகள்

"உன் அத்தை மகன் வேலன் ....
உன் அத்தை மகன் வேலன்  கார் விபத்தில் செத்துட்டான்.

அரசனுக்கு ஒரே அக்கையின் மகன்
கருப்பனுக்கு உறவில் போலி இல்லையென்று புரிய வைத்த ஒரே பந்தம்.
வேலன் - பிணமாய்.

சுற்றி சொந்தங்கள்.
அருகில் மனைவி
மேலே குழந்தை - இருந்தமையால் உன் உதடு விரிந்து முகம் மலர்ந்ததோ ? இதயம் மட்டும் துடிகலையேடா ?
குழந்தைக்காக எழுந்து வந்துவிட மாட்டிங்களா?
முகம் தெரியாத குரல்கள்.
கருப்பனுக்கு கண்ணீர் மட்டுமே பேசியது.
"சுய தொழில் சொல்லி கொடுத்து திக்கு திசை காமிச்சு கொடுத்தவன் நீ"
சுழல்ல சிக்கி, நடுவுல நிக்கிறேன் - துடுப்பா தோள் கொடுத்து தூக்கிடுவன்னு நம்பி வந்தேன். என்னை அவசரமுன்னு என்னை தூக்கவச்ச ?
சுடுகாட்டு வழியில்
பஞ்சுல சுத்தியவனை
பாடையோடு தோளில் வைத்து தூக்கி போகும் வழியில் வேலனை கேள்வி கேட்டுக் கொண்டே நடந்தான்.

சடங்குகள் முடிந்தது.
எளவு வீடு - இருள் வீசிற்று. "சோலி பார்க்கணும்னு" சொல்லிக்காமல் விடை பெற்றான்.

வானுக்கு நட்சத்திரம்
வாழ்வுக்கு நம்பிக்கை
கருப்பனுக்கு வாய்க்கபெற்ற நம்பிக்கை நட்சத்திரம் - வேலனை வானுக்கே தாரை வார்த்து விட்டு,
உறைந்த கண்ணீர் சுமையோடு விற்பனையை தொடங்கினான்.

தோல்வியை கடந்த இழப்பு.
வலியை கடந்த வேதனையை கொடுத்தது.
பகட்டையும் பதட்டத்தையும் பிளந்து பக்குவம் வந்தது கருப்பனுக்கு.

"மாற்றம் ஒன்றே மாறாதது "
பழமொழி கூட காலப் போக்கில் வார்த்தை வடிவம் மாறும்.
பாவம் கருப்பன் வாழ்கை மாறவில்லை.

கைக்குள் அடங்கும் சம்பளம்
கடித்து விடாத கடன் வட்டி
விற்பனையாளன் வேலை
ஆதரவு தரும் அம்மா
தட்டிக்கொடுக்கும் தந்தை,
அனைத்துமாய் நட்பு
     கருப்பன் வாழ்கை மாறுவதே இல்லை.

பட்டம் பெற்றான்
முதலீடு கிடைத்தது
மென்பொருள் விற்பனை சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றான்.
வேலை கிடைக்காதோர் செய்யும் விற்பனையாளன் வேலையை
வரமாக மாற்றினான்
விரும்பியவர்கள் பயிற்சி பெற கூடம் அமைத்தான்.
வெற்றிகள் வந்தன - ஆனால் கருப்பனுகோ
அவன் தேடிய தோல்வியின் காரணங்களுக்கு விடையாகவே கிடைத்தன.

என் வியர்வையின் வலிக்கு நீ விடையாய் வந்திருந்தால் வெற்றியே உன்னை வணங்கிருப்பேன். என் வேதனையையும் இழப்பையும் விலையாய் பெற்று தானே வந்தாய். விலகிப் போ..... கருப்பன் மாறவேயில்லை
 ***************************************நிறைவுற்றது***************************
Arjunan.I

"தோல்வி நாட்கள் "



 "தோல்வி நாட்கள் "

அத்தியாயம் 10

"தளபதி"
இதுவரை...

காதலும் பொய்த்தது

இனி
காலமும்  பொய்த்தது 
      
காதல் தோல்வியில்...
போதும் போதும்னு காதை பொற்றிக் கொண்டான். - இனி கனவு தான் காதலென்று கடை விரித்து விற்பனை செய்தான்.
தோல்வி உணர்வு அவன் சுவாசத்தோடு கலந்தது,
அவனை ஒட்டிக்கொண்ட தனிமை போய், அவன் வேலை நேரம் தவிர தனிமையை தேடி பயணமானான்.
உணவும் உறக்கமும் நேரம் கைமீறி - கணக்குகள் தப்பாய் போக
வேலை செய்தான் விற்பனை நடக்கவில்லை.

வங்கிகளின் வாசலிலும், முதலீடு செய்பவர்கள் முன்னாலும்
வாய்ப்பு கேட்டான், வாழ்வுக்கல்ல .. விற்பனைக்கு .. வெற்றிக்கு ..
"ஓடும் குதிரைக்கு மவுசு கம்மி, ஜெயிக்குர குதிரைக்கு தான் பந்தயம் போய் ஒரு முறை ஜெயிச்சுட்டு வா "
புரியவைத்தனர்  பந்தைய பண ராஜாக்கள்.

ஒரு நிஜம், ஒரு துவக்கம், ஒரு மையில்கல் ஒரே ஒரு வெற்றி
புதைக்காத புதையலை தேடினான். கனவுக்காக அல்ல
தோற்றுப்போன அவன் காதல் தோல்விக்கான காரணம் கண்டுபுடிக்க.

சென்னைக்கு விடுமுறையில் .

சென்னையில் வந்து இறங்கினான்,
அவசர சத்தங்களிடையே, எங்கோ சிதறும் தமிழை தேடிக் கேட்டு ஏங்கி சிரித்தான்.
அவனுள் ஒழிந்து கொண்டிருந்த உல்லாசங்கள் ஒருமுகப் பட்டன.

உச்சி வெயிலிலும் உள்ளம் குளிர்ந்து, வந்த வியர்வையையும்,
சட்டையோடு துடைத்துக்  கொண்டான்.

வாரம்தோறும் வரும்  ஞாயிற்று கிழமை போல அடிக்கடி அவனை கடந்து செல்லும் செல்ல சுடிதார்கள்.
பண்டிகை தினம் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தாவணிகள்.
அடடா என் தமிழச்சி இன்றி தமிழுக்கும் தான் ஏது அழகு ?

முகங்களை பார்த்து அதரவு பெற்று
தனிமை வேண்டாம், தந்தை தாய் கூடவே தங்கிடலம்னு தோணிற்று.
ரொம்ப நாள் பிறகு நண்பர்களோடு இரண்டாம் ஆட்டம் சினிமாக்கு போயிடு வந்து படுத்தான் .
எங்கிருந்தோ வந்த குளிர் காற்று அவன் உள்ளதை வருடியது.
தோல்வி புண்களுக்கு மயிலிறகாய் மை பூசின.

அன்றைய போரில் உடைவாள் தொலைத்து உயிரோடு மட்டும் திரும்பிய தளபதியாய் உணர்ந்தான். கண்கள் சுழட்டிக் கொண்டு வந்தது கருப்பனுக்கு.


அரசன் அலறும் சத்தம்,
வள்ளி ஒரு புறம் சுவரோடு சாயிந்து அழுதாள்.
அதிகாலை நேரம், சுய நினைவோடு எழுந்துக்கொள்ள நேரம் பிடித்தது கருப்பனுக்கு.

வீடே அழுகிறது. " அப்பா என்ன அச்சு ?
                                  என்னாச்சு அம்மா ? போன்ல யாரு ?
                                  யாருக்கென்ன "?

அப்பா அழுகைக்குள் ஒழிந்து கொண்டிருந்த வார்த்தைகள்

"உன் அத்தை மகன் வேலன் ....
உன் அத்தை மகன் வேலன் ....

அத்தியாயம் 11
**

"தோல்வி நாட்கள் "



"தோல்வி நாட்கள் "

அத்தியாயம் 9

"காதல்"

இதுவரை...

கருப்பனின் கடந்த காலம்

இனி

கருப்பன் தனிமை தேடியதன் காரணம்.

நாள் ஓட்டத்தில் தனிமை ஒட்டிக் கொண்டது.
ஒரு நாளுக்காக பயந்து வந்ததும். அந்த நாள் நெருங்கி விட்டதும் நினைவுக்கு வந்தது
கருப்பனுக்கு - அவன் காதலி ரோசா...

வருடங்களாய் காதலித்து மனதால் மனம் முடித்துக் கொண்ட ஜோடிகள்.

அவள் ..
பாலாடை பளபளப்பு, தண்டிக்க முடியாத குழந்தையின் வெகுளி தனம்.
பெயரை போலவே மனமும் மென்மையானவள்.

அவர்களின் இரு கண்களிலும் இரு வேறு கனவுகள்.
கருப்பனுக்கு - அவன் மண் குடிசையில்
                           அவள் மகாராணியாய்.
ரோசாவுக்கு  - அவன் மாளிகையில்
                          அவள் மனைவியாய்.

பையித்தியங்கள், ஒரு வழி பாதையில் பயணித்தன.
திரும்பி செல்ல அல்ல, திரும்பி பார்க்கவும் நேரமின்றி - காதலித்தே
பறந்த கிளிகள்.

காதலித்து கொண்டே பயணம்
தோல்வி பழக்கப்படவில்லை - வந்தாலும்
அதற்கும் முன்னால் தையிரியம் வந்தது.

காத்திருக்க சொல்லி, போராட சென்ற காதலன், பணம் செய்ய முடியவில்லை என்றதும்,
பெற்றோர் மிரட்டலுக்கு மதிப்பு கொடுத்து விட்டாள் போலும்.

தோற்ற போதெல்லாம் அவனை தேற்றும் அண்ணன் வேலனிடமே இந்த முறையும்.
வேகத்தில் வேலன் - "தடுத்திடலாம் திருமணத்தை"

"முடுவுகள் முடிவான பிறகு முயற்சி எந்த மூலைக்கு?" - கருப்பன் .

கடைசியாய் ரோசா பேசியபோது, மன்னிச்சுடு எனக்கு கொடுத்து வைக்கலன்னு சொன்னா திருமண தேதியோடு.
கருப்பனின் காதுகளில் தோல்வி நீ தோற்றவனு மட்டும் தான் கேட்டது.

உறங்கினால் விழிக்கலாம்..
தோற்றால் ஜெயீக்காலாம்..
மரணித்தால் ..?

வாழ்த்து ஒன்று எழுதி அனுப்பினான் கருப்பன்
முடிவுகள் முடிவான பின்பு,
முயற்ச்சிகள் அல்ல,
உழைப்புமே அர்த்தமற்றது.
போராடு....
அதிஷ்டமென்ன.?
அவளே காத்திருப்பாள்,
உன் காதலுக்காக அல்ல
உன் கனவுகளுக்காக.

"உன்மைக் காதல் - என்னுடையது.
வாழ்கை உரிமை - உன்னுடையது.
தியாகம் காதலுடைது,
ஆனால் ?
கனவு - நம்முடையது.
வெற்றி - உறுதி.
சமர்ப்பணம் - உனக்கே.

எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன .....?
மாலை நேரம்,
மறையும் கதிரவன்,
மலர்ந்த ரோஜா...மணக்கும் தோட்டம்,
வடிவம் மாறும் வெள்ளை மேகங்கள்,
அலை அடித்து ஓயிந்த  காதல் தெருக்கள்,
தனித்த மேஜைகள்,
என் கைகள் தீண்ட,
உன் கண்கள் தடுக்க,
நாம் கனவில் ஆட- இப்படியெல்லாம் பாட,
எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன .....?
நீ காதலியாய் கிடைக்க செய்யும் தவத்தில் தூங்கி விட்டேன் போலும்,
கணவனாய் தகுதி பெற தவறினேன்.
தவறு யாருடையது என்று தெளிவதற்குள்,
தண்டனை எனக்கு மட்டும் தான் என்று புரிந்து கொண்டேன்.
சிரித்து கொண்டே இருடி....
சிலிர்த்து கொண்டே இருப்பேன்.....
வாழ்ந்து விடுவேன்....
சுயநலவாதி - காதலன் - கருப்பன்.

சோதனையான விற்பனை வேலை
சென்னைக்கு விடுமுறை பயணம்
காத்திருந்த அதிர்ச்சி செய்தி...
அத்தியாயம் 10