Tuesday, April 12, 2011

லஞ்சமாய் பாசம் ....

லஞ்சமாய் பாசம் ......
இறைச்சியை பதப்படுத்தினாலும் -அவை
இறந்து போன பிணமே ............! பிரிவுக்கு பக்குவமாய் பட்ட பெயர் வைத்தாலும் அதன் வலி பிரளயமே .........!!
நண்பனே ..........................?
பிரிவுக்கு லஞ்சமாய் ..... பாசத்தை கற்பித்து விடலாமே -பின்
லியும் வேதனையும் விலகியே நிற்கும் ..!

Wednesday, March 16, 2011

கல்லூரி வாழ்கை புறப்பட தயார் ஆகியது ...........!

கல்லூரி வாழ்கை புறப்பட தயார் ஆகியது ...........!

மகிழ்ச்சிகளை -துணி மூட்டையாய்
                             தூக்கி கொண்டது ........
துணையாய் இருந்த தோள்கள் இன்று தூரமாய் ......!
புகைப்படங்களோடு பேச கற்பித்தன ..................!
மன்னிப்புகள் மனதோடும் .....,
நன்றிகள் நாக்கோடுமே நின்றன .....................!
நம் நினைவுகள் நிலை தடுமாறின ..................
புறப்பட்டது .............!!!!!!!!
வழியனுப்ப வார்த்தையில்லை ................
கைகளையும் அசைக்க விடாமல்
கண்ணீர் கைகளை கைப்பற்றியது ...................!!

Thursday, March 3, 2011

பெண்கள்,,,,,,,,,, ஆண்களுக்காக..........!

கருவறை இருட்டில் ; கருனை காட்டி,,,,,,,,,
தவள்ந்து........தடுக்கையில் .....தாங்கி,,,,,,,,,,
   தாலாட்ட .......தாய்,,,,,,
   சண்டை போட- சகோதரி ......
   சர்ச்சைக்கு -சக மாணவி .......
கண்ணாடி பாதரசம் இழக்க அலங்கரிக்க -ஒரு அழகியின்  கடைக்கண் பார்வை .....
கவிதைகள் கிளம்ப -கற்பணை காதலி .
இமைகள் கூட நினையாது கலங்கி நிற்கும் கண்ணீர்-காதலி........................................
நம்மை ......
               சகிக்க -சம்சராம் ,
               மன்னிக்க -மனைவி ..
மயங்கி மடிய மகளின்  மடி .......!!!!!!!

Thursday, February 24, 2011

அவள் நடந்தாள்............!

நடந்தாள் ........
                          தொடர்ந்தேன் .........
அவள் எண்ணத்தில் இடம் பிடிக்கும்
             ஏக்கத்தில் என் கால்கள் ........
அவள் இதயத்தில் இடம் பிடிக்கும் கற்பனையில்
             என் காதல் .......
                                            எனக்கும் முன்னே
                                             அவளை தொடர்ந்தபடி !!!!!

"காத்திருந்ததாம் காதல் "

"காத்திருந்ததாம் காதல் " 

"காரணமின்றி .......
கலைந்த போன .......
காதலர்களை .......
கல்லறையிலாவது சேர்த்து விட ......
கண்ணீரோடு காத்திருந்ததாம் ...................
..........................காதல்"................

இது தான் அழகு ..............!

இது தான் அழகு ..............!  
நீ ...............பெங்களூர் தோட்டத்தில் தோன்றினாலும் .
தமிழ்நாட்டில் ......தலைகாட்டினாலும்...........
வெளிநாட்டு கோர்ட்டில் வெளியே வைத்தாலும் ....
தாவணி கட்டிய தேவதை தயங்கி பார்த்து ........
எம் வாலிபம் கொடுக்க .............................
பெண்மை அதை சூடினால் தான் அழகு ...............,

தனிமை...................

தனிமை...................
இந்த வளையத்தில் வாழ
எவனுக்கும் வளைந்து கொடுக்கும் அவசியம் இல்லை ....................
கண்ணீர் விட கவலை அவசியம் இல்லை .......
மகிழ மாளிகை தேவையில்லை ..........
இங்கு விரோதமும் இல்லை
துரோகமும் இல்லை
ஆம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
நட்பை நடித்து காட்டுபவனும் இல்லை ..............

Thursday, February 3, 2011

காதல் ரோஜா....

காதல் ரோஜா....
வாழ்கை என்னும் தேவதையின் ...
இளமை என்னும் கூந்தலில் ,
கம்பாக ,,,,,
ஆண் மறைய - வெட்கத்தில் சிவந்த
பெண் தலை காட்டுகிறாள்.....
இதுவே ரோஜாவின் தோற்றம்....
காதலின் அர்த்தம்.......

Thursday, January 20, 2011

பிரிவுக்கு பின் பெண்கள்..............

காதலில் காதலனை
எற்று கொண்ட
காதலிக்கு-அதன்
பிரிவின் பழியை எற்க
விருப்பம் இல்லை போலும்..........
ஆம்..........................
அழகான என் காதலை
அமைதியாய் சொல்லத் தெறிந்த
அவளுக்கு............................
விட்டு செல்ல விளம்பரம்
தேவை படுவது
வருத்ததிற்க்குறியது.....................

Wednesday, January 19, 2011

காதல் வலிப்பது இல்லை...............

நொடிக்கு நூறு முறை
நினைத்தாலும் நெகிழவைப்பது
உன்னுடன் என் நினைவுகள்
கொஞ்சம் கூட வலிக்க வில்லை
நீ என் இதயத்தை கிழித்தபோதும்
பதிலாக
வலது கால் வைத்து இறங்கி வா-என்று
துடித்தது என் ................இதய துடிப்பு.......

Saturday, January 15, 2011

கூண்டில் .....காதல் கிளிகள்..................

கூண்டில் .....காதல் கிளிகள்..................


மேற்கூறை ஒழுகாத வரை வெயிலென்றும்
அதுவும் ஒழுகும் போது மழையென்றும்
குளிர்ந்து விட்டால் இரவென்றும்
அவ்வளவு உயர்ந்த வானையும்
கூண்டின் ஓட்டை வழி மட்டுமே பார்க்க முடிந்த
காதல் கிளிகள்.........................................................
அவை உண்ணுவதும் இல்லை
       உறங்குவதும் இல்லை.....
பகல் கடந்தும் காதலிக்கின்றன.......
ஓயாமல்.........
விடிய விடிய கொஞ்சி கொள்கின்ற்ன........
ம்ம்ம்ம்ம்ம்..............................
கொடுத்து வைத்த "காதலர்கள்"................

Friday, January 7, 2011

கண்ணீர்.............

எங்களை............
விருப்பம் உள்ளவர்களிடம்
விடுவித்து விடுங்கள்
விண்ணுலகம்-உங்கள்
விரல் நுனியில்...............

                                 கண்ணீர்.............