Friday, August 15, 2014

"தோல்வி நாட்கள் "



"தோல்வி நாட்கள் "

அத்தியாயம் -5

"மேன்ஷன்"

இதுவரை ...

ஜெய்ச்சானா கருப்பன் ?
மேன்ஷனின் மணத்தில் கருப்பனின் கலக்கம் ..

இனி.............

பத்துக்கு பத்து அறையில், பக்கத்து பக்கதுல மூணு மெத்தை, ஒரு அலமாரி, நடுவுல சும்மா நடந்து கிட்டு அவன் முதலாளி கிட்ட வந்து சேர்ந்து தகவல் சொன்னான் கருப்பன்,

விற்பனை செய்ய பொருள் போதுமே, தங்கும் இடத்துலேயே தலை சாச்சுக்குறேன், பேச அலை பேசி ஒன்று, இதற்க்கு மேல் அலுவலகம் எதற்குன்னு, வெளியூருல வியாபாரம் பண்ண, வெறுமன்ன தன்னை நம்பி கிளம்பியவன் கன்னன் , அட அவனும் கருப்பன் தானே. அவனுக்குனு அமைந்து விட்ட மேலாளர் , அவன் ஆயுவு பசிக்கும், சுதந்திர தாகத்துக்கும், பக்குவமாய் தீனி போடும் முதலாளி.

பொழுது போக்கும் ஞாபகம் வரும் போதெல்லாம் பூங்குழலியை பார்க்க வலை புத்தகத்தை புரட்டுவான். அவளும், ராஜியம் இழந்த போதிலும், ராஜா ராஜா சோழனின் நண்பன் என்ற போதும், பொன்னியின் செல்வனின் வரலாற்றில் கதாநாயகனாய் நின்ற வந்தியதேவனுமே கருப்பன் புணரும் கதாப் பாத்திரங்கள்.

தடியனும், கருப்பனும் காரணமின்றி கதைகள் உளறினார் , கடைத் தெருக்களில் உலவினர், தன்னில்லை மறந்த போதெல்லாம் தகராரிலே முடிந்த பேச்ச்சுக்கள், விடிந்ததும் அவையே அசை போடும் சுவாரசியங்கள்.

வேலை பளு குறைந்திருந்த போதும் வலு இழக்கும் கருப்பனை இரும்பு கரம் கொண்டே தேற்றும் தடியன், அவனை மீறியும் பழைய தோல்விகள் தீண்ட புகைந்து கொண்டிருந்த கருப்பனை மூன்று மெத்தையில் கருப்பனையும், தடியனையும் சகித்து மூன்றாம் மெத்தையில் ஒரு கருமி மீண்டும் கனல் கூட்டினான் . கருமி பெயர் சங்கரன் கையில் சொத்து பத்திரம் வாங்க, கழுத்தில் தாயத்து போல் தாலி கட்டி, ஆசுவாசமாய் விவாகரத்துக்கு காத்திருப்பவன் கருமி.

"தினந்தோறும் மயில்கள் அலைவதை போய் தொழில்னு சொல்லிக்கிரியே" - கருமி சிரித்த போதெல்லாம் சிவந்து போனான் கருப்பன்.

இமைக்கும் இடைவேளையில் இரண்டு வருட தோல்வி கதை காட்சியாகின,

மரங்கள் இழந்தும் மழையை மறந்தும் ........ முதல் தோல்வி - அத்தியாயம் – 6

No comments:

Post a Comment