Friday, August 15, 2014

" தோல்வி நாட்கள் "



" தோல்வி நாட்கள் "

அத்தியாயம் – 1
அரசு பேருந்து நிலையம்

நாள் முடிந்த களைப்பில்
நடை சுருங்கிய சூரிய மறைவு

வேதனையோடு வெளி வந்து
பிரியா விடை கொடுக்கும் பிறை,

கலங்காத காற்றும் கரைச்சலாய் கேட்கும்,
மின்னும் நட்சத்திரங்களுக்கு, "நாங்களும் போட்டி", "நாங்களும் போட்டின்னு" மிடுக்கும் மின் விளக்குகள்.

பக்கத்தில் இருப்பவனையும் ஒரு நொடி தேடிய பிறகே பேச விடும் ஜன கூட்டம்.

மன எண்ணகளையும் தடுத்து விடலாம் போல
தலைகளை எண்ணிட முடியா நெரிசல்.
அதையும் பார்க்கலாம்னு போட்டிபோடும் பஸ் ப்ரோக்கர்கள்,
எனக்கே சவாலானு கேட்டு கணக்கு பண்ண விடாத பேருந்து ஒலிபெருக்கி,

அணு தினமும்
அவசரத்தை மட்டுமே
அலுவலாய் கொண்ட
அரசு பேருந்து நிலையம்.

கண்களும் கால்களும் ஒரே வேலையாய்
உடம்பை ஓங்கி செலுத்தியபடி.

12 முடித்து பொறியியல் கல்லூரி தேடும் குழந்தையை போல,
அதையும் முடிக்க
கடன் கேட்டு வீட்டுக்கு வராமல் தடுக்க ஈரத் துணியை தேடும் பெற்ற வையுரை போல,
முடிந்த பிறகு,
கல்லடினாலும் கம்ப்யூட்டர் கிட்ட தான்,
எட்டாயிரமனாலும் ஏசி ரூம்ல தானு தேடி ஓடிகிட்டே இருக்கும் இளைஞன் போல
பேரூந்தை தேடி ஓடும் பிரயாணிகள்.

சீக்கிரம் சீகிரமுனதும்
வேர்வையை உப்பாக்கி
வறுத்தெடுத்து கொடுத்தார்
சிக்கன் 65யை நம்ப ஹோட்டல் அண்ணன்.

நாளைக்கு காலையில் உன்னை சந்திக்கிறேனு
உதடோடு உதடு பதித்து காதலை சொல்லி
காலில் மிதித்து போட்டு புகையோடு
பஸ்சில் ஏற துடிக்கும், வயதுக்கு வந்து விட்ட காளை இளைஞன்.

பெற்றோர் பார்க்க இதை பார்க்க முடியாது ,
ஏக்கப் பார்வையோடு "வில்லன் "
"வில்லாளன்"
சுருக்கமாய் வில்லுனும்
முடி குறைவால் தோழர்களால் செல்லமாய் சொட்டைனு பழக்கம் ஆன
கருப்பன்
நம் கதாநாயகன் ...

(கூட்டத்தில் காணமல் போன கருப்பனை தேடி அவன் தந்தை ... அத்தியாயம் இரண்டில் .)
*************************************************************************************

No comments:

Post a Comment