Friday, August 15, 2014

"தோல்வி நாட்கள்"



"தோல்வி நாட்கள்"

அத்தியாயம் - 7

"
நண்பர்கள் கூட்டமாய் .."

இதுவரை

முதல் தோல்வி நினைவுகளோடு கருப்பனின் நிகழ் கால நடை பயணம்.

இனி.....

முதல் தோல்வி நினைவோடே,
கண்ணீரை துடைத்து விட்டு கட்டிலில் விழுந்தான்.
உடல் வியர்த்தே எழுந்தான். அதே பழைய கனவோடு

பெங்களூர்

குளிர் காற்று ஆட்சியில் , மழை துளிகள் கூட்டணி சேர்ந்து கொள்ள,
அவ்வப்போது அறிக்கை விடும் எதிர் கட்சியாய் சூரியன்.

உலவும் மேகங்கள் தவிர,
உருவங்கங்கள் மொத்தமும் வெள்ளையாய்,
உடைகளில் ஆண்மையே அதிகம் இருந்தன,
உடைமைகளில் ஆடம்பரம் மட்டுமே இருந்தன.

காரணம் கேட்ட கருப்பனுக்கு கம்ப்யூட்டர் என பதில் கிடைத்தது.
குளிர் ஆட்சியில் ஊரே சோர்வுற்று இருந்தது.
குற்றம் சொன்னாலும் கருப்பன் விற்பனைக்கு கம்ப்யூட்டர் தானே வித்து.

கருப்பன் - " அட நான் கம்ப்யூட்டர் யா குறை சொன்னேன் ?
அது அறிவியல் ! என் கேள்வி அங்கீகாரம் !!
நான் புரட்சியாளன் இல்ல- ஆனால்
என் நெல்லை நான் விதைத்து சாப்பிட நினைக்கும் பட்டிக்காட்டுப் பயல் "

சட்டை காலரை தூக்கி விட்டு புறப்படுவான் தினமும்.
நாளும் பொழுதும் சுகமா போச்சுது, சந்தோஷமா போகல,

மழை பெய்யுது அளவு பத்தல
நெல் விளையுது ஆனா விவசாயி வயித்துக்கே இல்ல
ஓடி கொண்டே தான் இருக்கோம் வேகம் பத்தல
வெறி இருக்கு வீரியம் போதல
வழி இருக்கு வாயில் தெரியல,

கருப்பனுக்கு இந்த விற்பனையும் , நினைச்ச மாதிரி நிச்சயமா போகல.

அலை பேசியில் ராமன் - "கம்பெனி எப்படிடா போகுது ?
பொய் சிரிப்போடு "போய்டே இருக்கு மச்சி "

விருந்தாளியா போவதற்கு முன் அறிவிப்பது - நாகரீகம்.
விருந்து வச்சுடு வந்து விடுவோம் சொல்வது - நட்பு.

தடியனுக்கு புது வேலை
எபுளுக்கு கிடைத்த பிடித்த வேலை
சாமிக்கு சம்பளம் உயர்வு
ராமனுடைய அடுத்த காதல் தோல்வியோடு, காரணம் கிடைத்தது கொண்டாட. நண்பர்கள் கூட்டமாய் ..

"
கல்லூரில 'அலுமினி மீட் ' வருதாம்டா" சிரித்தான் சாமி,
"
அதுக்கு முந்தி என் பரீட்சை முடியனும்" - மேற்படிப்பு ராமன்
"
கார்ல போலாம்டா "- தடியன்

கொண்டாட காரணம் கிடைத்தது, நேரமும்,காசும் கூட இருக்கு,
தொலைந்த குதூகலத்தை தேடியபடியே நண்பர்கள் கூட்டமாய் ..
சிரித்த உதடுகள் சிரிப்பை மறந்து வாதம் தொடங்கிற்று.

குறைகளை நீர் வீழ்ச்சி வைத்து மறைத்தாலும் சூரியன் வந்ததும் மொட்டையாய் நின்ற பாறைகள் போல ஒருவர் பின் ஒருவராய் சோகங்களை ஒப்புவித்தனர் நண்பர்கள்.

வெளிநாட்டு கனவு தடியனுக்கு - "படிக்கவோ வேலைக்கோ போயே ஆகணும்டா
வேலை செஞ்சா பெரிய பதிவில செய்யணும்டா இல்ல சும்மா இருக்கலாம் சாமிக்கு -" தொழிற்சாலை வேலை முழுசா கத்துக்கணும்டா. இப்போ இந்தியா பூரா சுத்துறேன், உலகம் முழுக்க போய் கத்துக்கணும்டா".
ஏபெல் எடுத்தான் -"எதுவுமே புடிகலடா, எல்லாமே முதல்ல புடிச்ச மாதிரி தான் இருக்கு அப்புறம் இவளோ தான்னு தோணுது."

அனைவர் மனசுலயும் உள்ளிருந்த ஆசை, கருப்பனுக்கு நெஞ்சு நெறஞ்சு இருந்துச்சு.
"
சொந்தமா தொழில்டா
அதுல தான் சுகம்"

பேச்சு சூடாகிற்று ....

"
இன்னும் பைத்தியமா நீ ?
ஒருவாட்டி வாங்கி கட்டினியே போதலையா ?
வேகமா வளர்ந்து, வசதியா வாழணும்னு ஆசையே இல்லையா ?
நியாயமா பேசு, பொட்டில பணம் வச்சுருக்கியா ?
படிப்புக்கு வாங்கின கடன்ல வட்டியும் அசலும் எவளோ இருக்கு பாக்கி ..?

மரம் ஏறத் தெரிஞ்சவனுக்கு இல்லடா நொங்கு.
மரம் சொந்தமா வச்சுருகான் பாரு, அவனுக்கு தான் நொங்கு.

இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல. என் கூட வா நல்ல சம்பளம் வாங்கித் தரேன். நல்ல யோசி நல்ல முடிவா சொல்லு "

அடுத்தவன்
"
அவன் சொல்றத கேளு இன்னும் அங்கீகாரம், கனவுன்னு உலராத "

அடுத்து அடுத்து தொடுக்கப் பட்ட அம்புகள் ..
வழக்கம் போல அமைதி கருப்பன்.

இரவு தொடர்ந்து, அதிகாலை வரை தொடர்ந்து பேச்சுக்கள்,
அசுவாசித்து உறங்கினர்.
போர்வை போத்தி கொண்டான் கருப்பன்
குளிருக்காகவோ..? அவன் உறக்கம் தொலைத்ததை மறைக்கவோ ..?
அந்த வார்த்தைகள் "ஒரு வாட்டி வாங்கி கட்டினியே போதலையா ?"
இடியாய் இடித்ததில் இரண்டாம் தோல்வி ஞாபகம்...

அத்தியாயம் – 8

No comments:

Post a Comment