Friday, August 15, 2014

"தோல்வி நாட்கள் "



"தோல்வி நாட்கள் "

"ஆழ் மனசு அக்னி"

அத்தியாயம் - 4

இதுவரை

பேரூந்து புறப்பட்டது,
அலை பேசியில் அவசரமாய் அழைப்பு - சகோதர நட்பு சாமியிடமிருந்து.

இனி ....
இயற்கையை
செயற்கைக்காக மறைக்கும் குளிர்சாதனப் பெட்டியே,
இருப்பினும் அலை பேசியில் சாமி அலறினான்,,

"அப்பாவ அழவச்சுட்டு போய் சாதிச்சுடுவியா ?
இல்ல அந்த மனசு தான் அதுக்கு சந்தோஷ படுமா ?
எங்கயோ தோத்துட்டு வந்து தந்தைய தண்டிக்குறது தான் சரியா ?
திரும்ப வெற்றிய வெரட்டி புடிக்க போற வீரனு நினைக்குரியா உன்னைய ?
தாய தவிக்க விட்டு போர கோழை தானேடா நீ ?

எந்த கேள்விக்கும் விடையில்லை கருப்பனிடம்,
விசும்பினான் - "அப்படி இல்லடா சாமி "

பத்து வினாடி மௌனம் சொல்லியது - அந்த பாலிய சிநேகத்தின் வீரியத்தை.

சாமி தொடர்ந்தான் "சரி சரி பத்திரமா போய் இறங்கு , தடியன் கிட்டையும் பேசிட்டேன் வந்துடுவான் காலைல
வட்சுடுறேன் "
டங்க்.............

கண்களை மூடி, மூடிய பேரூந்து மேற்கூரை வழியே வானம் பார்த்தான் ,
அசிரிரி பேசியது,
"புறப்பட்ட பேரூந்தின்
ஜன்னலோர சொகுசு இருக்கை,
தோன்றி மறையும் நிச்சயமில்லா நாளை ,
மனதோடு பதியும் கடைசி காட்சி தான் பிரிவு"

பதறி எழுந்தான், அதே பழைய கனவு
இறங்கும் இட அறிவுப்பு, பதட்டம் நீடித்தது. பெட்டி, வண்டியோடு இறங்கினான்.
கர்ணன் கவச குண்டலத்தை கூட தானம் கொடுத்திடுவான் - கருப்பன்
இரு சக்கர வாகனத்தை விட்டு கொடுக்க மாட்டான்.
அவன் பார்க்கும் விற்பனையாளன் தொழிலும் அப்படி.

அன்பு கூட்டணியின் அடுத்த களவானி - தடியன் - ராகவன் -வந்து நின்றான்,
வாடான்னு ஒத்த வார்த்தைல மொத்த நலனையும் விசாரிச்சுட்டு
பெங்களூர் குளிரில்
சுதந்திர காற்றை புகையாய் சுவாசித்துவிட்டு புறப்பட்டனர் மேன்ஷனுக்கு.

மதியமும் கீழ் மெஸ் லையே சாப்பிடுக்க சோம்பல் பார்காம,
சாயங்காலம் வந்துடறேன், எது நாலும் டக்குனு போன் பணிடுனு
தட்டை அலம்பி தக்குன்னு வச்சுட்டு விடைப் பெற்றான் தடியன் .

கருப்பன் - விற்பனையாளன் - வெற்றிக்கு காரணம் கேட்ப்பவன்,
விற்பனை வேலை அவன் விருப்பம் மட்டுமன்றி - அதை வருங்காலத்தில் வரமாக மாற்றுவதே அவன் ஆழ் மனசு அக்னி.

இவற்றை நிஜமாக்க வாய்ப்பு தேவை
வாய்ப்பு உருவாக அங்கீகாரம் தேவை
அங்கீகாரமும் நம்பிக்கையால் வளருமே தவிர தொடங்காது,
வெற்றி ஒன்றே இதை சாத்தியமாக்கும்.
அதை தேடிய படியே இந்த இறுதி பயணம் - இல்லையேல்
இவனும் சாகும் வரை சம்பளம் வாங்கும் சோக்காளியே.

கண்ணாடி பார்க்கும் போதெல்லாம் நானும் முதலாளி நானும் முதலாளின்னு சொல்கையில்,
சீக்கிரம் முதலாளி ஆகிடுவேன்னு சொல்ல மறந்து விட்டியேனு மனம் அவனை கேலி செய்த பொது

"மரணம் ஒரு தோல்வியே
நமக்கும் அது உறுதியே
அதுக்குள்ள ஒருமுறை
ஜெய்ச்சுதான் பார்க்கலாமே"

சொல்லிவிட்டு புறப்பட்டான் ...

ஜெய்ச்சானா கருப்பன் ?

அத்தியாயம் -5

No comments:

Post a Comment