Friday, August 15, 2014

"தோல்வி நாட்கள் "



"தோல்வி நாட்கள் "

அத்தியாயம் - 3

"புறப்பாடு"
அதிகாலைன்னு அர்த்தராத்திரி துடங்கி,
தங்கம் திருடும் திருடனுக்கு தயங்காது,
அவள் மனதில் தோன்றிய அதிசயங்களை கோலமாய் வரைந்தாள்.
அதை உணவாய் தேடி வந்த உயிரினம் கோல வடிவம் மாற்றிவிடுமோனு
வானம் வருந்தி வடித்தது ஒரு துளி
கலைத்து விடாமல் விலகி செல்லும் உயிரினமாய் மக்கள்,
துளியாய் வந்து நின்றது பேரூந்து.

பதறினாள் வள்ளி,
இரு இரவாய் கண்களுக்கு உறக்கம் காட்டாது
குழந்தைக்கு உணவு ஊட்டுவதை போல்
பிள்ளைக்கு தேவையானதை பார்த்து பார்த்து அளவாய் புகுதினாள்
அளவாய் வைத்தாலே அவன் சீக்கிரம் வந்துடுவிவான்னு நம்பினாள் போலும்,
தாய் ஆகிற்றே ,

கருப்பன் சோகமாய் "அம்மா" என்றான்,
அம்மா பேசினாள்..
இருபத்தி மூனு வயசுடா உனக்கு,
கணக்கில் வராத,
உனக்குமே ஞாபகமிராத - பத்து மாசம் என்னோடு தானடா இருந்த,
அன்று தொப்புள் கொடியறுத்து பிரிவை பிரசங்க படுத்திய போதே கலங்கவில்லையடா,
இப்போ பணிக்கு பெங்களூர் தானே போற,
ஆசிர்வாதங்கள் என்று,
வள்ளி முகத்தால் மிடுக்கினாலும், மனதால் முனுமுனுத்தாள்
"இதெல்லாம் உனக்கு தேவையா "

பேரூந்து வாயிலில் வந்து நின்று
கன்னடத்து பைந்தமிழில் புறப்பட 15 நிமிஷம்னு சொல்லி ஆகிற்று,
நட்புக்கள் இருக்கை எண்ணை ஒப்புவிக்க,
பெட்டிகள் ஓடின அதன் இருக்கைக்கு,
அலைபேசியில் ஒன்றும், அருகில் பலவுமாய் நட்புகள் ஆறுதல் கை கொடுத்தன கருப்பனுக்கு.

அரசனும் வள்ளியும் பெற்றெடுத்த ஒற்றை பிள்ளையின், முதல் பிரிவில், அர்த்தம் புரியாது அனாதையாய் புழுங்கின.

புழுக்கத்தை அணைக்க, மௌனத்தை முடிக்க - தன் பங்குக்கு
வானம் பேசியது - மழை துளிகளாய்.
சூரியன் உதிக்கும் திசை தேடி பூக்கும் பூவை போல
கருப்பனை சுற்றியது வழியனுப்ப வந்த விழிகள்.
அந்த பார்வைகள் பேசாமல் பேசியது கருப்பனின் பாசத்தை.

போய் சேரும் இடம் தெரிந்து தான் பறவைகள் புறப்படுகின்றனவா ?
யார் துரத்துவதால் தூர தேசம் செல்கிறது மேகம் ?

மறைமுகமாய் காரணம் கேட்கப் பட்டது க்கருப்பனிடம்

தோல்விகள் துரத்த
கொட்டி கிடக்கும் வாய்ப்புகளில், தனக்கான வாழ்க்கையை தேடும்

ஊரே குறை சொல்லும்
உலகமே எதிர்பார்க்கும்

சராசரி குற்றவாளி இளைஞன்.
கண் சிமிட்டி சிரித்த படியே இருக்கை தேடி அமர்ந்தான் கருப்பன்.

வேண்டி விரும்பி வாழவைக்கவே வந்தாலும்
முதல் மழைக்கு ஒதுங்குவதே வழக்கம்.
பயணம் வெற்றிக்கு தான்னு நம்பினாலும், கருப்பன் கண்ட தோல்விகளே சோர்ந்து போன முகங்களுக்கும், தயங்கும் வார்த்தைகளுக்கும் காரணம்னு நமக்கு தெளிவாகின.

பூஜைகளோடு பஸ் புறப்பட்டது,
அதோ கருப்பன் கை அசைக்கிறான்,
உறவுகள் உருவங்களாய்
பின் நோக்கி செல்கிறது
பிரிவு கருப்பன் செவிட்டில் அரை சத்தத்தோடு...

அலைபேசியில் அவசரமாய் அழைப்பு, சகோதர நட்பு சாமியிடமிருந்து

அத்தியாயம் – 4

No comments:

Post a Comment