Friday, August 15, 2014

"தோல்வி நாட்கள் "



"தோல்வி நாட்கள் "

அத்தியாயம் 6

"
முதல் தோல்வி"

இதுவரை...

மேன்ஷன் வாழ்கை கருப்பனின் ஆழ் மனசு அக்னி

இனி .... துரும்பாய் உறுத்தும் கருப்பனின் கடந்த காலம்.

மரங்களை இழந்தும், மழையை மறந்தும், குளிர் காற்று புறக்கணித்தும், கலை இழக்காத சென்னை - நண்பகல்,

நாம் வளர்த்த செடியின் முதல் பூ, நம் காதல் நமக்காக பேசிய முதல் வார்த்தை, பிறந்த நாளுக்கு வரும் முதல் வாழ்த்து எப்படியோ ? முதல் உத்தியோகமும் அப்படி, கருப்பனுக்கும் அப்படியே..

கழுத்தையும், கைகளையும் முழுவதுமாய் மூடிய பத்தான்கள், ஒரு கையில் பைல், விற்பனைக்கு தேவையான பேப்பர்களோடு, மறு கையில் பதட்டம், பயிர்ச்சியாளரோடு, வீதி வீதியாய், கடை கடையாய் , வீடு வீடாய் வியாபாரம். "சம்பளம் கிடையதுபா பயிர்ச்சி இலவசம் வித்தால் கூலி - உனக்கான அணி உருவாக்கி கொண்டால் நீ மேலாளர் முடியுமா உன்னால் "? கம்பீரமான குரலில் - பெருமாள் - கருப்பனின் முதல் பயிற்சியாளர் பின்பு குருநாதர்.

வேலை கிடைத்தும் கருப்பனின் வீடு அதிர்ந்தது, சம்பளம் இல்லை தான் ஆனால் புடிச்சுருக்குன்னு சொன்னதும் - சம்மதம் கொடுத்த வீட்டை விழுந்து வணங்கி வேலையை துவங்கினான்.

பசி வந்து பத்தும் பறந்துச்சானு பார்த்ததில்ல, பணம் வந்து கண்ணை மறச்சு கண்டதில்ல - ஆனால் கருப்பனுக்கு விருப்பு வெறுப்புக்கள் பறந்தன மேலாளர் பட்டம் கண்ணை மறைத்தது. அரட்டைகளை ஒயித்தான் , திரையரங்கம் மறந்தான், சொர்ப்ப வரவுக்கு மீறிய செலவுகள் இருந்த மையால், தந்தை முகம் பார்க்காமலே தவிர்த்தான்.

நேரம் வந்தது, அவன் அணி வலுத்தது, அறிவிப்பு வருமுன்னு பாராட்டுக்கள் குவிந்தன, பிரயாணங்கள் மரியாதையின் நிமித்தமாய்.

பாதியில் நின்ற இரயில் எதிர்பாராமல் குலுக்கி விட்டு கிளம்புவது போல ஒரு அதிர்வு,

பயிற்சியாளர் பெருமாள் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டார், அச்சாணிக்கே ஆபத்து - காளை கருப்பனுக்கு ஏது வேலை ?

ஒளிந்து கொண்டிருந்த சூரியனை மேகங்கள் விலக்கி காட்டி தோகை விரித்து நின்ற மயிலை பார்த்து சிரிப்பதை போல வெற்றி மாலையோடு தோல்விக்கு காத்திருந்த கருப்பனை பார்த்து சிரித்தது.

வெற்றிக்கு அறிவிப்பு தேவை இல்லை தோல்வியை கேட்ப்பவர் எவருமில்லை - கேட்டாலும் சொல்ல நா வருவதில்லை.

அவசரமாய் பறக்கும் வண்டிகள், மந்தையை விட்டு பிரியாத இருகால் ஆடுகள் - அதோ கருப்பன் அலை பேசியில் ஒடிந்த குரலில் போச்சு போச்சுன்னு புலம்புறான் அத்தை மகன் வேலனிடம்.

நாம் வளர்த்த செடியின் முதல் பூ பறிக்கும் போதே உதிர்ந்தது, கருப்பன் முன்னால் நட்சத்திரம் மண்ணுலகம் வந்து மன்னிப்பு கேட்டது ,கோவில் கோபுரங்கள் குடை சாய்ந்தன.

இதோ இரயில் கிளம்பிடுச்சே இருபது நிமிஷத்தில் வீட்டில் இருப்போமே ? அம்மா அப்பா கிட்ட எப்படியித.........................? பலமாய் காற்று இரயில் படிகள், சாரலால் நினைந்தது.

ஐயோ நாளைக்கு காலைல வேலை இல்லையே ? போன வாரம் சம்பளமும் வாங்கலையே ?

மனம் அலை பாய்ந்தது உருண்டை கம்பி ஈரத்தில்.. வழக்கமான பிடி வழுக்கிக்கொண்டு.........

அனுபவச் சான்றிதளுமில்லை - அட நம்ப பட்டதாரியும் இல்லையே

பயம் தலைக்கேறியது, தலையோ சுற்றியது கால் இடரியது.....

அத்தியாயம் 7

No comments:

Post a Comment