Friday, August 15, 2014



"தோல்வி நாட்கள் "

அத்தியாயம் 2
"கருப்பனின் தந்தை "

இதுவரை ...

கூட்டத்தில் காணாமல் போன கருப்பனை தேடி அவன் தந்தை ...
தலை சுற்றி பார்ப்பதற்குள், பக்கத்தில் வந்து நின்றான் .
இனி ...



அறியிவல் அளவாய் வளர்ந்து,
சாமி சிலைகளும்
சாதி சமையங்களும் சிதையாமல்
நிமிரிந்தே நின்று,
கடிதங்களில் கூட கண்ணியம் தாண்டாத-
காதல் நிஜங்கள் நிறைந்து கிடந்த காலகட்டம்.

சோலைகள் நடுவே, தட்டு தடுமாறி முளைத்த தார் சாலைகள்,
வானம் போய்த போதும்,
நிலம் விளைந்த போதும்,
மணம் உவந்து அழவும்,
மனை கிடைத்து ஆளவும் - நேரம் கிடைத்த
பாக்கியசாலிகளின் உலகம்.

தமிழ் மலையாள ஒற்றுமையிலும்,
குமரி, கேரளம் வரைப் படத்திலும்,
தவிர்க்க முடியாத நாஞ்சில்நாட்டில், காமராசர் அரசவையில், சகாதேவனை பிறந்தான் "அரசன்".

அங்கே பருவ மழை தொடர்ந்தாலும்,
அருள் மழை மொழியவே செந்திலாண்டவன் சேர்த்து கொண்டான் போலும்,
திருச்செந்தூர் இல் குடியேறினர்.
கோவில் அரசு பணியில் தந்தையின் நேர்மை,
கம்பீரம் பொருந்திய லக்ஷ்மி களையுடைய தாயின் பிள்ளை,
பெயர் சொல்லவே செலமாய் வளர்ந்தான்.

தாயே அனாலும் கண்கள் இரண்டு தான்.
ஐந்தாவதாய் பிறந்ததாலோ ஏனோ பெற்றோரை பிரிந்து,
அக்கையின் அரவணைப்பில் ஆள் ஆகினான்.

செந்தூரில் கல்லூரி,
உறங்கா நகரில் முதல் உத்தியோகம் - தடுமாறிய பிறகு,
மெட்ராஸில் தஞ்சம் புகுந்தான் தனியார் பணியில்.

தொலை தூரம் பிரிந்தாலும் பிரியாது தொடர்ந்த பந்தம் - காதல்.
எதிர்ப்புகளும், எதார்த்தங்களும் பிணைத்து போட்டது முன்று முடிச்சு.
குமரி மலையும், செந்தூர் கடலும்
கனலாய் பெற்றெடுத்த ஆண் பிள்ளை
கருப்பன்.

பேரூந்து நிலையத்தில் ....

குறை சொல்லவே நாடகத்தை நன்கு நான்கு முறை அலசும் விமர்சகரை போல,
தன் மேல் ஏதும் தவறு இருக்குமோனு,
23 வருடங்களை புரட்டி போட்டு கொண்டே - தந்தையாய் அரசன்.
நடை பயின்ற கருப்பன்
மேடையில் பேசிய கருப்பன்
தேர்வு முடிவுகள் போதும் மட்டும் துவண்ட திருடன் கருப்பனின் முகம்,
கருப்பன் கல்லூரி முடித்த அன்று உதித்த கேள்வி குறி,
ஆண்டுகள் இரண்டு கழிந்தும், அதே குறியோடு,
நினைவுகளை நிலை படுத்த முடியாமல்.
பேரூந்து நிலையத்தில் நின்றார்.
தியாகி கோலத்தில்,
தன்மான மனைவி - வள்ளியை கையில் பிடித்தபடி,
வழியனுப்ப வந்த அரசன்.

(பதறினால் வள்ளி .... அத்தியாயம் 3)

No comments:

Post a Comment