Friday, August 15, 2014

"தோல்வி நாட்கள் "



"தோல்வி நாட்கள் "

அத்தியாயம் 9

"காதல்"

இதுவரை...

கருப்பனின் கடந்த காலம்

இனி

கருப்பன் தனிமை தேடியதன் காரணம்.

நாள் ஓட்டத்தில் தனிமை ஒட்டிக் கொண்டது.
ஒரு நாளுக்காக பயந்து வந்ததும். அந்த நாள் நெருங்கி விட்டதும் நினைவுக்கு வந்தது
கருப்பனுக்கு - அவன் காதலி ரோசா...

வருடங்களாய் காதலித்து மனதால் மனம் முடித்துக் கொண்ட ஜோடிகள்.

அவள் ..
பாலாடை பளபளப்பு, தண்டிக்க முடியாத குழந்தையின் வெகுளி தனம்.
பெயரை போலவே மனமும் மென்மையானவள்.

அவர்களின் இரு கண்களிலும் இரு வேறு கனவுகள்.
கருப்பனுக்கு - அவன் மண் குடிசையில்
                           அவள் மகாராணியாய்.
ரோசாவுக்கு  - அவன் மாளிகையில்
                          அவள் மனைவியாய்.

பையித்தியங்கள், ஒரு வழி பாதையில் பயணித்தன.
திரும்பி செல்ல அல்ல, திரும்பி பார்க்கவும் நேரமின்றி - காதலித்தே
பறந்த கிளிகள்.

காதலித்து கொண்டே பயணம்
தோல்வி பழக்கப்படவில்லை - வந்தாலும்
அதற்கும் முன்னால் தையிரியம் வந்தது.

காத்திருக்க சொல்லி, போராட சென்ற காதலன், பணம் செய்ய முடியவில்லை என்றதும்,
பெற்றோர் மிரட்டலுக்கு மதிப்பு கொடுத்து விட்டாள் போலும்.

தோற்ற போதெல்லாம் அவனை தேற்றும் அண்ணன் வேலனிடமே இந்த முறையும்.
வேகத்தில் வேலன் - "தடுத்திடலாம் திருமணத்தை"

"முடுவுகள் முடிவான பிறகு முயற்சி எந்த மூலைக்கு?" - கருப்பன் .

கடைசியாய் ரோசா பேசியபோது, மன்னிச்சுடு எனக்கு கொடுத்து வைக்கலன்னு சொன்னா திருமண தேதியோடு.
கருப்பனின் காதுகளில் தோல்வி நீ தோற்றவனு மட்டும் தான் கேட்டது.

உறங்கினால் விழிக்கலாம்..
தோற்றால் ஜெயீக்காலாம்..
மரணித்தால் ..?

வாழ்த்து ஒன்று எழுதி அனுப்பினான் கருப்பன்
முடிவுகள் முடிவான பின்பு,
முயற்ச்சிகள் அல்ல,
உழைப்புமே அர்த்தமற்றது.
போராடு....
அதிஷ்டமென்ன.?
அவளே காத்திருப்பாள்,
உன் காதலுக்காக அல்ல
உன் கனவுகளுக்காக.

"உன்மைக் காதல் - என்னுடையது.
வாழ்கை உரிமை - உன்னுடையது.
தியாகம் காதலுடைது,
ஆனால் ?
கனவு - நம்முடையது.
வெற்றி - உறுதி.
சமர்ப்பணம் - உனக்கே.

எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன .....?
மாலை நேரம்,
மறையும் கதிரவன்,
மலர்ந்த ரோஜா...மணக்கும் தோட்டம்,
வடிவம் மாறும் வெள்ளை மேகங்கள்,
அலை அடித்து ஓயிந்த  காதல் தெருக்கள்,
தனித்த மேஜைகள்,
என் கைகள் தீண்ட,
உன் கண்கள் தடுக்க,
நாம் கனவில் ஆட- இப்படியெல்லாம் பாட,
எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன .....?
நீ காதலியாய் கிடைக்க செய்யும் தவத்தில் தூங்கி விட்டேன் போலும்,
கணவனாய் தகுதி பெற தவறினேன்.
தவறு யாருடையது என்று தெளிவதற்குள்,
தண்டனை எனக்கு மட்டும் தான் என்று புரிந்து கொண்டேன்.
சிரித்து கொண்டே இருடி....
சிலிர்த்து கொண்டே இருப்பேன்.....
வாழ்ந்து விடுவேன்....
சுயநலவாதி - காதலன் - கருப்பன்.

சோதனையான விற்பனை வேலை
சென்னைக்கு விடுமுறை பயணம்
காத்திருந்த அதிர்ச்சி செய்தி...
அத்தியாயம் 10

No comments:

Post a Comment