Friday, August 15, 2014

"தோல்வி நாட்கள் "



"தோல்வி நாட்கள் "

அத்தியாயம் 8

"தொடரும்  தோல்வி"

இதுவரை...

நட்போடு குதுகலம்

இனி ....அலை அடித்து ஒதுங்கிய மீனாய்

முதல் வேலை இழந்து வீடு திரும்பிய வழியில், பெருமாள் பேசினார்.
உடன் படிக்கை தொடங்கியது.

நம்பிக்கை மட்டும் முதலாய் வைத்து தொழில் தொடங்கப்பட்டது.

புதிதாய் வந்த பங்குதாரர்களால் கருப்பன் சோதிக்கப்படான்,
குருவாய் நினைத்த பெருமாள் நம்பிக்கையை உரசினார்.

ஓட்டின் ஓட்டை வழி சூரிய ஒளி துளைப்பதை போல், இதயத்தை துளைத்தது. கண்ணாடியை காத்த நம்பிக்கை சிதறி போயின.

அதை உண்மையென்று உணர்வதற்கு முன்னால், ஊர்ஜ்ஜித படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டான். "அலை அடித்து ஒதுங்கிய மீனாய் துடித்தான்".

2வது தோல்வி தான். மீள வழி தெரிந்தும் அசையாமல் முதலையாய் கிடந்தான்,
"அவனும் அவன் தொழில் ஆசையும்" - கேலி பேசப்பட்டான்.
'தாமரையும் சேரையும் போல, பிரிந்தாலே பயன்படும் " - ஒப்புக்கு நின்றவன் எல்லாம் ஒப்பனை பேசினான்.

ஆனால் கருப்பனுக்கு
வேலை இழந்ததை விட குருவின் பிரிவு வேதனை அளித்தது.

யோசித்தான் ...
பிரிவுக்கு எந்த ஒரு காரணமும்  ஏற்பபுடையது தான் - ஆனால்

பணமா ? அதனால் பிரிவா ?
அதுக்கு அவ்வளவு பலமா ?   தடுமாறி நின்றான்

இந்த பண மண்டபத்தை கட்டிடவா ? என் நம்பிக்கை மாளிகை உடைக்கப்பட்டது ? தவறி விழுந்தான்.

என்னடா இதுக்கே தளர்ந்துட்ட ?
எவ்வளோ முயற்சி ?
எத்தனாவது தோல்வி ?

மனசுல ஊனமா ?
மூளையில சுவாதின குறைவா ?
தோல் சுருங்கி இரத்தம் சுண்டி போச்சுதா என்ன ?

முத்து எடுக்கணும்னு குதிச்சாச்சு.. இப்ப வந்து
மூச்சு முட்டுது, மீன் கடிக்குது எல்லாம் பார்க்க முடியாதுடா
போய் பரிட்சய எழுதி பட்டத்தை வாங்கு. உங்க அப்பராச்சும் நிம்மதியா இருப்பார். சென்னைக்கு வருவேன், நேர்ல பேசிக்கலாம் - அதே ஆபத்பாந்தவன் அத்தை மகன் வேலனின்  அலைபேசி   அறிக்கை.

தோளில் தோல்வியோடு
காதில் கேலிகளோடு - எழுந்து நின்றான்.
கடன் கழுத்தை கவ்வியது
காதலி கண்ணீரோடு எதிரே நின்றாள்
வேலைக்கு போக நிர்பந்திக்கொண்டான்.

தோழமை தோள் கொடுக்க, வேலை விண்ணப்பங்கள் குவிந்தன,
மனம் இணங்காமலும், வாய் கைகொடுத்து வேலை கிடைத்தது.
புது மென்பொருளின் விற்பனை பொறுப்பு.
1 1/2 ஆண்டு களித்து கிடைத்த மாத சம்பள வேலை.

திரும்பி படுத்துக் கொண்டான்
நடந்து முடிந்து 1 1/2 ஆண்டு அச்சு, நேற்று போல் நினைவு.

ஓர் இழப்பு
ஓர் மரணம் ...

அத்தியாயம் 9 

No comments:

Post a Comment